Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் மற்றும் காமராஜ் என்ற இரண்டு பேர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |