டிராக்டரில் கடத்தி சென்ற 5 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குரக்கன் தாங்கள் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில் காவல்துறையினர் குரக்கன் தாங்கள் கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தும் படி சைகை செய்துள்ளனர்.
இதனை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுநர் வண்டியை அங்கையை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த டிராக்டரில் சோதனை செய்த போது அதில் 5 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் 5 லிட்டர் சாராயத்தையும், டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.