Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தம் 2,600 லிட்டர்… வனப்பகுதியில் கிடைத்த சாராய ஊறல்… போலீசாருக்கு பாராட்டு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விலக்கு காவல் துறையினர் கருக்காகுறிச்சி வனப்பகுதியில் பேரல்களில் 2,600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மது விலக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  அப்பகுதியிலுள்ள புதர்கள் சூழ்ந்த வனப்பகுதியில் பேரல்கள் 2,600 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து சாராய ஊறல்களை தரையில் ஊற்றி அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இது போன்ற சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்றால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து மது விலக்கு காவல் துறையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |