கள்ளக்குறிச்சியில் நேற்றைய தினம் வார சந்தையில் ரூபாய் ஒரு கோடியே 54 லட்சத்துக்கு பருத்தி விற்பனையாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பருத்தி விற்பனை நடைபெறும். அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற பருத்தி விற்பனையில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் சுமார் 8086 பருத்தி முட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
என்றைக்கும் இல்லாத அளவிற்கு கூட்டம் நேற்றைய தினம் அலைமோதியது. அதில் ஒரு குவிண்டால் பருத்தி விலை ரூபாய் 5,441 க்கும், குறைந்த விலையாக 3,792 விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் மட்டும் ரூபாய் ஒரு கோடியே 56 லட்சத்து பருத்தி விற்பனை நடைபெற்றதாக கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க இயக்குனர் தெரிவித்துள்ளார்.