Categories
தேசிய செய்திகள்

ALERT:திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான திடீர் எச்சரிக்கை….!!!

ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காலகட்டத்தில் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா குறைந்து வந்த நிலையில் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம்போல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனை தொடர்ந்து தற்போது கோடைகாலம் என்பதால் அலிபிரி நடைபாதையில் பாம்புகள் அடிக்கடி படையெடுத்து வருகின்றன. இதில் குறிப்பாக நடைபாதை அருகில் 10 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று வந்து படமெடுத்து ஆடியதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த பாம்பை பிடித்து காவலாளி அலுவலக கண்காணிப்பாளர் சங்கராச்சாரி சேஷாசலம் வனப்பகுதியில் விட்டார். இதுகுறித்து அவர் கூறியது தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியிலிருந்து பாம்புகள் அடிக்கடி அலிபிரி நடைபாதைக்கு வருகிறது. அதனால் பக்தர்கள் நடைபாதையில் கவனமாக நடக்க வேண்டும் என்றும் காட்டுக்குள் செல்ல கூடாது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும்.மேலும் பாம்பு தென்பட்டால் தேவஸ்தானத்திற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Categories

Tech |