இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.அவ்வகையில் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் ஏராளமானோர் தங்களுடைய மொபைல் போனுக்கு சார்ஜ் போடுகிறார்கள்.மக்கள் இவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதன் மூலம் யூ எஸ் பி கேபிள் மூலமாக தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேசமயம் புதிய வைரஸ்கள் மொபைலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் போட்டாலே உள்ளிருக்கும் தகவல்கள் திருட வாய்ப்புள்ளதால் இந்த வகை மோசடிக்கு “Juice Jacking”என்று பெயரிடப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் சார்ஜர் மூலம் சார்ஜ் போட்டால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நேரடியாக யூஎஸ்பி கேபிள்களை பயன்படுத்தும் போது மால்வேர்களைக் கொண்டு டேட்டாவை திருட அதிக வாய்ப்பு உள்ளது.