அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய எம் ஐ சி ஆர் கோடு மற்றும் காசோலைப் புத்தகத்தை அக்டோபர் 1ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியாது என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் உடனடியாக புதிய காசோலை புத்தகத்திற்கு அருகிலுள்ள இந்தியன் வங்கியில் விண்ணப்பிக்கவும். இல்லை என்றால் பரிவர்த்தனை செய்ய இயலாது. இதனை நீங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் அப்ளை செய்த ஒரு வாரத்திற்குள் உங்கள் கையில் செக் புக் வந்துவிடும். வாடிக்கையாளர்கள் பிரச்சினைகள் ஏதுமின்றி பண பரிவர்த்தனை செய்து கொள்வதற்கு அக்டோபர் மாதத்திற்குள் புதிய காசோலை புத்தகத்தினை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்கள். இல்லையென்றால் பரிவர்த்தனை செய்ய இயலாது. இந்த தகவல் எஸ்எம்எஸ் வழியாக இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.