தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ஆறு ரூபாயை தாண்டும் என தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் குழு தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் 5.50 காசுகள் ஆக உயர்த்தப்பட்டது. இது குறித்து பேசிய சிங்கராஜ், ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு ரூ.4.80 முதல் ஐந்து ரூபாய் வரை செலவாகிறது.
முட்டையின் விலை ஐந்து ரூபாய்க்கு மேல் வைத்தால் மட்டுமே எங்களால் தொழில் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ஆறு ரூபாயைத் தாண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.