தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.