வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது .
தமிழகத்தில் நிவர் புயல் வந்து தாக்கியதில் சென்னை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நமக்கு பெரும் மழையை தந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழையை கொடுத்துள்ளது. இதனால் இடங்களில் வெள்ளக்காடாக காட்சியப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு சில காலம் ஆகலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி நகர்ந்து, தென் தமிழக கடற்கரையை டிசம்பர் இரண்டாம் தேதி அடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அதிகபட்சமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் டிசம்பர் 1, 2, 3 தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.