Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ALERT: அடுத்த 24 மணி நேரத்தில்…. புயலாக வலுப்பெறும்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

அந்தமான் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இதனையடுத்து அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. மேலும்இது புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலைகொள்ளும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |