கடந்த சில நாட்களுக்கு முன்பு சுங்க சாவடி சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் வாயிலாக பாஸ்டேக்கில் இருந்து பணம் திருடப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இவ்வாறு இருந்து பாஸ்டேக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது என பரவிய தகவல் உண்மையில்லை என்று பேடிஎம் மற்றும் என்பிசிஐ விளக்கம் அளித்துள்ளன.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவிய வீடியோ போலியானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடுவது போல் ஸ்மார்ட்வாட்ச் வழியாக பாஸ்டேக் பணத்தை திருட முடியாது. பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே பாஸ்டேக் உருவாக்கப்பட்டது. எனவே அது மிகவும் பாதுகாப்பானது. எனவே வாகன ஓட்டிகள் யாரும் பயப்பட வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளது.