தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நல்ல மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது . நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன, இதனை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலான மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிலையில் அந்தமான் அருகே வங்கக் கடலில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைய வாய்ப்பு இல்லை என்றும் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.