Categories
தேசிய செய்திகள்

ALERT: ஆதார் விபரங்கள் கசிந்தால் நடவடிக்கை…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!!!!

வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விபரங்களைக் கசியவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

போலியான வாக்காளர் பெயர் பதிவிடுதலைத் தவிர்ப்பதற்கு வாக்காளர் பட்டியலுடன் ஆதார்  எண்களை இணைப்பதற்கு அனுமதி வழங்கி தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்  பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு, தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது ஜூலை 4ம் தேதியிட்ட அந்த கடிதத்தில் இருப்பதாவது “வாக்காளர்கள் தங்களுடைய ஆதார்எண்களை அதன் பட்டியலுடன் இணைப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படலாம். இருப்பினும் அவர்கள் தங்களது ஆதார் எண்களை அளிப்பதை அவர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமே தவிரத்து, அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

அதே சமயத்தில் ஆதார் எண்ணை வழங்காத காரணத்துக்காக எந்த வாக்காளரின் பெயரையும் வாக்காளர் பதிவு அதிகாரி, பட்டியலிலிருந்து நீக்கக்கூடாது. எச்சூழ்நிலையிலும் வாக்காளர்களின் ஆதார் விபரங்கள் பொது மக்களின் கவனத்திற்குச் செல்லக்கூடாது. இருப்பினும் வாக்காளர்களின் தகவல்களை பொது வெளியில் வைக்க வேண்டுமெனில் ஆதார்விபரங்கள் நீக்கப்படவேண்டும் (அல்லது) மறைக்கப்பட வேண்டும். ஆதார் எண்களை வாக்காளர்கள் வெளிப்படுத்தக்கூடிய 6பி படிவத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில், ஆதார் நெறிமுறைகள் கண்டிப்பாகப் கடைபிடிக்கப்பட வேண்டும். வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் 6பி படிவங்கள், ஆதார் எண் பதிவுக்குப் பின் வாக்காளர்பதிவு அதிகாரிகளால் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். அப்படிவங்களை பொது வெளியில் பார்வைக்கு வைத்தால் வாக்காளர்பதிவு அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அக்கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |