தற்போதைய காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்பம் பெருகப் பெருக மோசடிகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் பழைய மோசடி ஒன்று மீண்டும் உயிர் பெற்றுள்ளது. அதில் அதிக மோசடிக்கு ஆளாக்கப்படுபவர்கள் யார் என்றால் தங்களது கணினிகளில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் தான்.
இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்களுக்கு “browser has been locked” என்ற போலியான popup notification வருகிறது. 173-279 சட்டத்தின் கீழ் உங்கள் கணினி லாக் செய்யப்படுகிறது. இதை unlock செய்ய 6 மணி நேரத்திற்குள் 3000 முதல் 29 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்த கேட்கிறது. ஆனால் இது ஒரு மோசடி. இதை யாரும் நம்ப வேண்டாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அப்படிக் கேட்கும்போது ctrl+alt+delete மற்றும் end task கொடுத்து வெளியேறி விடுங்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஆபாச தளங்களை பார்ப்பதை கைவிட வேண்டும்.