இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வட மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவியது. அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இதையடுத்து கடந்த சில நாட்களாக டெல்லியில் தொடர்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அடுத்த மூன்று தினங்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தீபகற்ப பகுதியில் வருகின்ற ஜூன் 7-ஆம் தேதி முதல் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இதனிடையே வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.