நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் பயன்பெற முடியும். தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டம் தற்போது 36 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் பொருட்களை தகுதியற்றவர்கள் பெற்று கள்ள சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
அதனால் ரேஷன் பொருட்கள் தகுதி உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தகுதி உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதையும்,தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனால் விரைவில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தகுதியற்றவர்களுக்கு ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். இவர்களால் ரேஷன் கடைகளில் பொருட்கள் எதுவும் வாங்க முடியாது . இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் தகுதியற்றவர்களது ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.