திருத்தப்பட்ட வருமான வரியை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவது தொடர்பான விதிமுறைகளை தற்போது மத்திய அரசு மாற்றி வருகிறது. இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொகபத்ரா இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர் ஒருவர் ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், மேலும் இதன் மூலமாக நிஜமாகவே வருமான வரி தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு உதவ முடியும் என கூறினார்.
2022 ,2023 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி அன்று செய்யப்பட்டது. இதில் வருமான வரி தாக்கல் செய்த பின் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ள அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டனை 12 மாதத்திற்குள் தாக்கல் செய்தால் வரித் தொகையில் 25 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் 12 மாதத்தை கடந்தால் வரித் தொகையில் 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருத்தபட்ட வருமான வரி ரிட்டன்களை ஒரு மதிப்பீட்டு ஆண்டில் ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.