நாட்டில் கடந்த சில நாட்களாக அரசு பகிரும் முக்கியமான தகவல்களை திருடும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற வேலைகளில் ஹேக்கர்ஸ் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் ரகசியமான மற்றும் முக்கியமான ஆவணங்களை வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என்று மத்திய அரசு அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
செயலிகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால் தவறாக பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசின் முக்கிய தகவல்களை ஹேக்கர்ஸ் திருடுவதற்கும் வாய்ப்புள்ளது. அதனால் இனி ரகசியமான மற்றும் முக்கியமான ஆவணங்களை வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் செயலிகளில் பகிரக் கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது.