தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வந்த கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதை இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது.அது அடுத்த ஆறு மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்றனர் 11ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதியை அடையும் என்றும் காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்.காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இரவு முதல் நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வேலூர் நீர்நிலைகளின் அருகில் நின்று செல்பி எடுப்பது மற்றும் ஆற்றைக் கடப்பது கூடாது. ஆதார்,ரேஷன் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்..