நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை எலும்பு மரணம் என்ற புது வகையான நோய் தாக்குவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து மும்பையில் கொரோன வைரஸிலிருந்து மீண்ட பலர் எலும்பு மரண நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத்தில் அறிகுறி இன்றி இருக்கும் இந்த நோய் பாதிப்பு, நாளுக்கு நாள் தீவிரமடைந்து கடுமையான வலிகளை ஏற்படுத்தும். மூட்டு பாதிப்புக்குள்ளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.