நாடு முழுதும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அனைத்து துறைகளிலும் அண்மை காலமாக அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக ஆன்லைன் புழக்கம் அதிகமானதால் தகவல் திருட்டு, போலியான வங்கி கணக்கின் இணைப்பு வாயிலாக பணமோசடி ஆகியவை அதிகரித்துவிட்டது. அதேபோன்று நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா பெயரில் போலியான மோசடி நிகழ்வுகள் அதிகமாக நடப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் OTP என்பது வங்கியில் அவர் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய மிக முக்கியமான ஒன்று ஆகும்.
பணம் அனுப்புவது மற்றும் பணம் பெறுவது ஆகிய பரிவர்த்தனைகளுக்கு OTP நம்பர் வாயிலாக உறுதிப்படுத்தி ஒப்புதல் வழங்கப்படும். இந்த OTP நம்பர் வங்கி வாடிக்கையாளரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வங்கி சார்பாக அனுப்பப்படுகிறது. இந்த OTP-ஐ சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற யாரிடமும் இதனை தெரிவிக்கக்கூடாது என்றும் இதை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டேட் பேங்க்ஆஃப் இந்தியா வங்கி வெளியிட்ட டுவிட்டரில், OTP நம்பரை யாரிடமும் ஷேர் செய்யக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் என்னை யாரிடமும் ஷேர் செய்யக்கூடாது, மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். நான் யார்? என கேள்வி கேட்டு, அதற்கு ”OTP” என்ற பதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்காக இதுபோன்ற பதிவுகளை அவ்வப்போது ஸ்டேட் பேங்க்ஆஃப் இந்தியா வெளியிட்டு வருகிறது.