காலநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சென்னை, தூத்துக்குடி, மும்பை உட்பட 12 இந்திய கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் என்று அதிர்ச்சி தகவலை நாசா ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை உட்பட 12 இந்திய நகரங்கள் மூழ்கும் என்று எச்சரித்துள்ளது.
2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது. 12 நகரங்களில் தமிழகத்தில் சென்னை 1.87 அடி, தூத்துக்குடி 1.9 அடி, மும்பை 1.9 அடி, கொச்சி 3.32 அடி அளவுக்கு நீரில் மூழ்கும் என்று தெரிவித்துள்ளது.