Categories
தேசிய செய்திகள்

ALERT: காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு…. நீர்வளத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் சென்ற சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. அத்துடன் அணைகளின் பாதுகாப்பு காரணமாக காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு 1,13,000 கனஅடிக்கு மேல் அதிகரித்து உள்ளது. அதனால் அணையின் நீர்மட்டமானது நேற்று மாலை 115,73 அடியாக உயர்ந்தது.

தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெள்ளஅபாய எச்சரிக்கை அனுப்பி இருக்கிறார்.

மேலும் காவிரி கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு போகவேண்டும் என்றும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துகொள்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் உபர்நீர் போக்கியின் இருகரைகளிலும் உள்ள தங்கமா புரிப்பட்டினம், அண்ணாநகர், பெரியார்நகர், காவிரிபாலம், காவேரி கிராஸ், நவபட்டி மற்றும் நாட்டாமங்கலம் பகுதிகளில் தண்டோரா வாயிலாக வருவாய் துறையினர் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |