Categories
தேசிய செய்திகள்

ALERT: குலாப் புயல்…. இன்று மாலை கரையை கடக்கும்…. ஆரஞ்ச் அலர்ட்…..!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினம், கோபால்பூர்க்கும் இடையே வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.

அதனால் ஒடிசா, ஆந்திராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். மேலும் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |