சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:” தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நாளை தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .