ஜூன் மாதம் இறுதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்க கூடுதலாக 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வரி செலுத்துவோர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்காவிட்டால் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் கார்டு செயலிழந்து விடும் என வரித்துறை கூறியிருந்தது. அப்படி பான் எண் முடக்கப்பட்டிருந்தால் உங்களால் வருமான வரி செலுத்தவோ, வங்கி கணக்கு தொடங்கவோ, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.