Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதத்தில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே மழை குறைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |