தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 25-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories