Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. மக்களே வெளியே போகாதீங்க…. கடும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.அது இன்று மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர்,பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |