Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அதீத கனமழை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுநாள் சில இடங்களில் அதிக கனமழையும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அதிக கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய கூடிய பகுதிகளுக்கு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படும்.
அந்த வகையில் அதிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ள இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மிக கன மழை பெய்வதற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்படும். அதன்படி நாளை கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல், 11-ந் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’டும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’டும் விடுக்கப்பட்டுள்ளது. ‘ரெட்’ மற்றும் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரையில் மழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |