இனி அனுமதி இன்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டிட அனுமதி பணிகளை ஒருங்கிணைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு பொது கட்டட விதிகள் அறிவிக்கப்பட்டன. அந்த விதிகளின்படி உள்ளாட்சி அமைப்புகள் புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.இருந்தாலும் உள்ளாட்சி அமைப்புகளின் பல பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்துறைக்கும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து பொது கட்டட விதிகளை முறையாக கடைப்பிடித்து புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் போது அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை உள்ளாட்சிகளில் நகரமைப்பு அலுவலர்கள் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் கட்டிட அனுமதி வழங்கிய பிறகு உரிய கால இடைவெளியில் கள ஆய்வு செய்த விதிமீறல் நடைபெறுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் .ஒருவேளை அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டுவது தெரிய வந்தால் தவறான ஆவணங்கள் கொடுத்து அனுமதி வாங்கி இருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும்.மேலும் அனுமதி இன்றி கட்டப்படும் கட்டிடங்கள் மீது உரிய அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்ட விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும். இந்த விஷயத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நகரமைப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.