Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரடங்கானது வரும் ஜூலை-31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் எத்தனை நாட்கள் நீட்டிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியதையடுத்து தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரகாலத்திற்கு(ஆகஸ்ட்-9 வரை) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க அவசியம் மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். மூன்றாவது அலை தமிழகத்தில் ஏற்படாத வகையில் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பொதுஇடங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |