தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2ஆம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.