தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வரும் 4ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மே 28 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம். நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை,நீலகிரி உட்பட 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.