Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில், அதாவது கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்யலாம் என்றும் , நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை மறுநாள் அதிக கன மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் இந்த நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை எச்சரித்துள்ளது.

Categories

Tech |