கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் எதுவும் திறக்கப் படாமல் இருந்தன. அதனால் மாணவர்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. மாணவர்கள் அத்து மீறும் செயல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்களை தரைகுறைவாக பேசுவதும் அவர்களை தாக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அவ்வகையில் சென்னையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் நடத்துனரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்காமல் பல ஒழுங்கீனமான செயல்களை செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பச்சையப்பாஸ்,நியூ காலேஜ் மற்றும் சைதாப்பேட்டை கல்லூரி மாணவர்கள் மீது அடிக்கடி புகார்கள் வருகின்றன. அதனால் காவல்துறை தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வரும் புகார்களை விசாரித்து பார்த்தால் மாணவர்கள் மீது தான் புகார் இருப்பதாக தெரிகின்றது. நடத்துனர்கள் மாணவர்களை ஒழுக்கமாக இருக்க சொல்ல அவர்கள் கேட்காமல் இருக்கின்றனர். அதனால் அடுத்த பயணிகளுக்கு தான் பாதிப்பு.
ஏற்கனவே இந்த விதிமுறை இருக்கிறது. அதில் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கண்டிக்க சொல்லி அனுப்புவோம். ஆனால் தற்போது அப்படியில்லாமல் புகார் அதிகமாக இருந்தால் கேஸ் மேல் இடத்திற்கு மாற்றப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் யாராவது இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.