தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 25 நாட்கள் மழை நாளாகத்தான் இருக்கும் என வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை இருக்கும்.. இப்போது இருக்கும் மழை முழுமையாக விலக வேண்டுமென்றால் நவம்பர் 19ஆம் தேதி வரைக்கும் காத்திருக்க வேண்டும். நவம்பர் 20ஆம் தேதி தான் முழுமையான வானிலை மாறி வெயில் தெரியும். முழுமையாக மழை இல்லாத நாடாக மாறும். அதன்பிறகு டிசம்பர் 25ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.