Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழக மக்களே…. இன்னும் ஒரு மணி நேரத்தில்…. புதிய அலர்ட்….!!!!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் பகுதிக்கு நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற இரண்டாம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியை நெருங்கி கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக்கடலில் இன்று உருவாகும் நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Categories

Tech |