Categories
மாநில செய்திகள்

ALERT: தீபாவளிக்கு முதல் நாள்… வெளியானது எச்சரிக்கை…!!!!

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.

இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அக்.,22 மற்றும் 23 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். ஒடிசாவில் அக்., 23 முதல் 25 வரையும், அக்., 24 மற்றும் 25 மேற்கு வங்கம், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Categories

Tech |