Categories
மாநில செய்திகள்

ALERT: தென்மாவட்டங்களில் இன்னும் 4 நாட்களுக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

தென்தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில், வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று அடுத்த 4 நாட்களுக்கும் இந்தப் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென்தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |