வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை காலை மேலும் தீவிரம் அடையும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புரெவி புயலாக மாறியுள்ளது. புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி இலங்கை கடலோரப் பகுதியை கடந்து செல்லும். அதன்பிறகு டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரியிலிருந்து 860 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
அது அடுத்த இரண்டு மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.