இந்திய மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் பல்வேறு சந்தைகளுக்கான சந்தை நேரத்தை ஆர்பிஐ அதிகரித்துள்ளது. அதன்படி நாளை முதல் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறைச் அளவிலான அன்னிய செலவாணி, இந்திய ரூபாய் வர்த்தகம், ஃபாரெக்ஸ் டெரிவேடிவ்கள், ரூபாய் வட்டி விகித டெரிவேடிவ்கள், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ ஆகியவற்றின் வர்த்தகங்களை கொரோனாவுக்கு பின் முந்தைய நேரங்களிலேயே அதாவது காலையிலேயே தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
எனவே நாளை முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை சந்தைகளின் வர்த்தக நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும். தற்போது கொரோனா குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.