வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறி மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதால் நாளை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 11 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருகிறது.