Categories
மாநில செய்திகள்

ALERT: பிஎம் கிசான் நிதி உதவி திட்டம்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

pm-kisan திட்டத்தின் கீழ் தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. pmkisan  திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விவசாயிகளுக்கு மூன்று முறை 2000 ரூபாய் என ஆண்டிற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. pm-kisan திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் 11 வது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. ஆனால் இன்னும் சிலருக்கு முந்தைய தவணைகளே  வரவில்லை என கூறப்படுகின்றது. அதே போல இன்னும் பலர் இந்த திட்டத்தின் கீழ் இணையாமல் இருக்கின்றனர். பயிரிட கூடிய நிலங்களை தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் pm-kisan திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதி உடையவர்கள் தான். மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் நிறுவன விவசாயிகள் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர்கள் குடும்பங்கள், மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்றவர்கள்  இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது.வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்து நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோல, கணவன் – மனைவி இருவருமே நிதியுதவி பெறுவதாகவும் தெரியவந்திருக்கிறது.இது  விதிமுறைப்படி தவறாகும். மேலும் இதுபோன்று நிதியுதவி பெறுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களை திட்டத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்படுகிறது. ஒருவேளை நீங்களும் தவறாக நிதியுதவி பெறுவதாக இருந்தால் நீங்களாகவே வாங்கிய பணத்தை ரிட்டன் செய்ய வேண்டும்.

Categories

Tech |