Categories
மாநில செய்திகள்

ALERT: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகம் புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று அடுத்த மூன்று நாட்களில் இலங்கை நோக்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை ,காரைக்கால், கடலூர் ஆகிய பகுதிகளில் நாளையும் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் 4ஆம் தேதியும் அதிக வாய்ப்புள்ளது.

Categories

Tech |