தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சமையல் சிலிண்டர் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தேநீர் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இனி பாக்கெட்டில் பத்து ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டே டீ கடை பக்கம் கூட யாரும் செல்ல முடியாது. கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு கப் டீ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தண்ணீருக்கு அடுத்தபடியாக மிக அதிகமாக அருந்தக் கூடிய பானம் தேநீர். அனைவரும் விரும்பி அருந்து கூடிய இந்த தேநீரின் விலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. அரிசி, காய்கறி, எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில் தமிழக மக்களின் இன்றியமையாத பானமாக டீ, காபி விலையும் உயர்த்தப்படுகிறது. பணிகள் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் இதுவரை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கப் டீ தற்போது 12 ரூபாயாக, 15 ரூபாயாக நகர்ப்புறங்களில் பல இடங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.