பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் சில நாட்களாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இவர்களிடம் சட்டப்பிரிவு 107-இன் கீழ் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கிக் கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் 18 வயதுக்கு குறைவானவர்கள் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதுவரை மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 37 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.