சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றார்கள்.
வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் இணையத்தில் அறிமுகமாகும் நபர்கள் கேட்கும் விவரங்களையும் வாங்கி விவரங்களையும் பகிரக்கூடாது. பெரும்பாலும் மோசடி நபர்கள் தான் போலியான அடையாளங்களுடன் இணையதளம் வாயிலாக பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கின்றார்கள்.
பல்வேறு வகையில் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி மொபைல் ஆப்கள் மூலம் செல்போனில் இருக்கும் உங்களின் புகைப்படங்கள் வங்கி விவரங்களை பதிவிறக்கம் செய்து மோசடி செய்த பணத்தை திருடி விடுவார்கள். தேவையற்ற கடன் லோன் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். பரிசு கூப்பன் தருவதாக கூறியும் ஏமாற்றுவார்கள். ஆகையால் நம்ப வேண்டாம். ஏதேனும் சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணத்தை மீட்கலாம் என கூறப்பட்டிருக்கின்றது.