இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது கேஒய்சி அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதை விரைவில் முடிக்குமாறு அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு மூடப்படும் என வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பி என் பி வங்கி கேஒய்சி அப்டேட் செய்யுமாறு அதன் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் வங்கி டிவிட் செய்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் கேஒய்சி அப்டேட் அவசியம் முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
கேஒய்சி புதுப்பிக்க உங்கள் பேரண்ட் கிளையை தொடர்பு கொள்ள வேண்டும். கேஒய்சி அப்டேட் செய்யப்படவில்லை என்றால் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை மாற்றம் செய்ய முடியாது. மேலும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அல்லது ஒரு வருடத்திற்கும் வங்கி தனது வாடிக்கையாளர்களை கேஒசி படிவத்தை பூர்த்தி செய்ய சொல்கின்றது. கேஒய்சி படிவத்தில் வாடிக்கையாளர்கள் பெயர், வங்கி கணக்கு எண், பான் கார்டு எண்,ஆதார் அட்டை எண், மொபைல் எண் மற்றும் முழு முகவரியை நிரப்ப வேண்டும். மேலும் வங்கி கிளைக்கு சென்றும் உங்கள் கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம் அங்கு கேஒய்சி படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்த பின் மூன்று நாட்களுக்குள் உங்களுக்கு கேஒய்சி அப்டேட் செய்யப்படுகின்றது. அதே நேரம் வீட்டில் இருந்தபடியே கேஒய்சி அப்டேட் செய்துகொள்ள விரும்பினால் உங்கள் ஆவணங்களை வங்கிக்கு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் கேஒய்சிக்கு வாடிக்கையாளர் ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, nrgea அட்டை, பான் கார்டு போன்றவற்றுடன் முகவரி சான்றுகளை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்.